அடுத்த சிக்கல்... கிருஷ்ணகிரி, தருமபுரி, தி.மலைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Update: 2024-12-06 12:35 GMT

கர்நாடக மாநிலம் கோலார், கேஜிஎப் போன்ற பகுதிகளில், ஃபெஞ்சல் புயல் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன் கனமழை பெய்ந்தது. அந்த மழை நீர் தென்பெண்ணை ஆற்றில் வருவதால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து, விநாடிக்கு ஆயிரத்து 644 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் முழு கொள்ளவான 52 அடியில், 51 அடியை எட்டியுள்ள நிலையில், அணைக்கு வரும் நீர் முழுவதும் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்