`நம்ம ஊரு திருவிழா 2025 ஒத்திகை நிகழ்ச்சி' நாட்டுப்புற கலைஞர்களுடன் கலந்துரையாடிய எம்.பி. கனிமொழி

Update: 2025-01-03 01:52 GMT

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து நடத்தும் 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி சென்னையில் வரும் 13ம் தேதி தொடங்கி ஜனவரி 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமியக் கலைஞர்கள் இணைந்து சென்னையில் மாநகராட்சி விளையாட்டுத்திடல் மற்றும் பூங்கா உள்ளிட்ட பல இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றனர். திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தலைமையில் இந்த விழா நடைபெற உள்ள நிலையில் , சென்னை காந்தி மண்டபத்தில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்த எம்பி கனிமொழி, நாட்டுப்புற கலைஞர்களுடன் கலந்துரையாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்