2 மணி நேரம் பாம்பனில் நடந்த விஷயம் - இறுதிக்கட்ட ஆய்வில் புதிய ரயில் பாலம்..
பாம்பன் கடலில் ரூ. 545 கோடியில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை ஆய்வு செய்த ரயிவே பாதுகாப்பு குழு, பாலத்தில் சில குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக்காடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அங்கு குறைபாடுகள் சரி செய்யும் பணிகள் தொடங்கி நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று ரயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலம் சோதனை ஓட்டத்திற்காக திறக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தூக்குப்பாலம் திறந்து வைக்கப்பட்டிருந்தது. புதிய ரயில் பாலம் இம்மாத இறுதியில் தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் ரயில்வே அமைச்சர் பாம்பன் வருகை தந்து புதிய பாலத்தை ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.