கரும்பு தோட்டத்தில் திடீரென எட்டி பார்த்த 14 அடி மலைப்பாம்பு.. அதிர்ச்சியில் உறைந்த விவசாயி
கள்ளக்குறிச்சி அருகே கரும்பு தோட்டத்திற்குள் 14 அடி நீள மலைப்பாம்பு புகுந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். கள்ளக்குறிச்சி தொட்டியம் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில், 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டபோது, ராட்சத மலை பாம்பு ஊர்ந்து செல்வதை பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சின்னசேலம் தீயணைப்பு வீரர்கள், அந்த பாம்பை பத்திரமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.