பெட்ரோல் பங்கில் GPay ஆப்பால் வெட்டு குத்து.. ஊழியருக்கு பயங்கரம் - அதிர்ச்சி சிசிடிவி

Update: 2023-08-14 05:20 GMT

காஞ்சிபுரம் அருகே பணம் கொடுத்தால் தான் பெட்ரோல் நிரப்புவேன் எனக் கூறிய பெட்ரோல் ப்ங்க் ஊழியரை, இளைஞர் அரிவாளால் தலையில் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையான வேடல் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு ஒரே பைக்கில் வந்த மூன்று இளைஞர்கள், ஜீபே மூலம் பணம் அனுப்புவதாக கூறி ஊழியரை பெட்ரோல் நிரப்ப சொன்ன போது, பணம் அனுப்பினால் தான் பெட்ரோல் என ஊழியர் கூறியிருக்கிறார். இதனால், ஊழியருடன் இளைஞர்கள் தகராறு செய்த நிலையில், அதில் ஒருவர் ஊழியரை அரிவாளால் தலையில் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே, இளைஞரை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டிய இளைஞரை பிடித்த சக ஊழியர்கள், அவரை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், ஊழியரை அரிவாளால் வெட்டியது வையாவூரை சேர்ந்த கோபி என்பது தெரியவர, அவருடன் வந்த ஸ்ரீராம் மற்றும் ஜீவா ஆகியோரை போலீசார் தேடி வரும் நிலையில், இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்