காலை கடன் கழிக்க சென்ற சிறுமி துடிதுடித்து மரணம்.. வினோதமாக இருப்பதாக தொட்டு பார்த்ததால் விபரீதம்

Update: 2024-12-20 06:45 GMT

ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள தாவரகரை கிராமத்தில் வசிப்பவர் விவசாயி கிருஷ்ணன் (35) இருவடைய மகள் திவ்யாஸ்ரீ (10) தாவரக்கரை அரசு தொடக்கப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று காலை திவ்யாஸ்ரீ கழிவறை அருகே சென்றுள்ளார். அப்போது கழிவறை அருகே இருந்த மின்வயரை அவர் தொட்டுள்ளார். அப்போது திவ்யாஸ்ரீ உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது இதில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் வீட்டின் அருகே இரவு நேரங்கில் காட்டு யானை வராமல் இருக்க கிருஷ்ணன் மின் விளக்கு அமைத்திருந்தார். அதில் மின்கசிவு ஏற்பட்டிருந்துள்ளது.

அதனை அறியாமல் மாணவி திவயாஸ்ரீ மின்வயரை தொட்டதில் உடலில் மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் மாணவியின் சடலத்தை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்