கோவளம் கடற்கரையில் திடீரென இறந்து கிடக்கும் மீன்கள்.. திகைத்து போய் நின்ற மக்கள்
கோவளம் கடற்கரையில் டன் கணக்கில் குவிந்துள்ள குப்பை கழிவுகளால் கடல் உயிரினங்கள் பாதிப்புக்கு உள்ளாவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட கழிவுகள், செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரையில் டன் கணக்கில் குவிந்தது. கழிவுகள் கடலில் கலந்ததால், மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. இந்நிலையில், கரை ஒதுங்கிய மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.