காற்றில் அதிக ஈரப்பதம்..உடலுக்குள் இறங்கிய ஹீட் வேவ்.. ஒரே நாளில் 141 பேர் பலி..
காற்றில் அதிக ஈரப்பதம்..உடலுக்குள் இறங்கிய ஹீட் வேவ்.. ஒரே நாளில் 141 பேர் பலி.. மொத்தம் 568 மரணங்கள்
பாகிஸ்தானில் கடும் வெப்ப அலை வீசி வரும் நிலையில் கடந்த 6 தினங்களில் வெயிலால் பலியானோர் எண்ணிக்கை 568ஆக அதிகரித்துள்ளது... 21ம் தேதி மட்டும் 141 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் 105 டிகிரி அளவு வெயில் வாட்டியது. காற்றில் அதிக ஈரப்பதம் இருப்பதால் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கூட 120 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு உணரப்படுகிறது... 4 நாள்களில் 267 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். கடந்த மாதம் கராச்சியில் 125 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வெயில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது...