"அவனுக்கு இதய கோளாறு நெஞ்சில் உதைச்சாங்க... ஆதாரம் இருக்கு" - விக்னேஷ் விவகாரத்தில் புது திருப்பம்

Update: 2024-11-15 03:43 GMT

சென்னை கிண்டியில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் தாக்கிய விக்னேஷின் சகோதரர் லோகேஷ் அளித்த புகாரை கிண்டி காவல் நிலையத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை.

கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்திய விக்னேஷின் தம்பி லோகேஷ் கிண்டியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். புகாரரை கிண்டி காவல் நிலைய போலீசார் ஏற்றுக்கொள்ளவில்லை. புகார் மனுவை வாங்கி படித்த காவல் துறை அதிகாரிகள், அதில் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதாக உறுதியளித்தனர். புகார் மனு அளித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விக்னேஷின் சகோதரர் லோகேஷ், தனது அண்ணன் விக்னேஷ் ஒரு இதய நோயாளி என்றும், அவரை நெஞ்சிலே எட்டி உதைத்திருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்