Erode | Womensday | மாமியார் மருமகளுக்கு நூதன கேம் வைத்த ஹோட்டல் - கடைசியில் வென்றது யார்?

Update: 2025-03-10 04:42 GMT

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் ஆண்டு தோறும் மகளிர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டு மாமியாருக்கு பிடித்த உணவை மருமகள் ஆர்டர் செய்ய வேண்டும், மருமகளுக்கு பிடித்த உணவை மாமியார் ஆர்டர் செய்து ஊட்டிவிட வேண்டும் என்ற புதுவகை விளையாட்டு அறிமுகம் செய்யப்ப்பட்டது. மிச்சம் வைக்காமல் சாப்பிடுபவர்களுக்கு பில் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான மாமியார் - மருமகள்கள் கலந்து கொண்டு உணவை ஊட்டிவிட்டு அன்பை பகிர்ந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்