பவானிசாகர் வனத்துறை சோதனை சாவடியில் 50 ரூபாய் நுழைவு கட்டண ரசீதை கொடுத்துவிட்டு 500 ரூபாய் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட காராச்சிகொரை பகுதியில் வனத்துறை சோதனை சாவடி அமைந்துள்ளது. வனப்பகுதியில் பயணிக்கும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 ரூபாய்க்கான ரசீது மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், வாகன ஓட்டிகளிடம் லஞ்சமாக 500 ரூபாய் வசூல் செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. வனப்பகுதியில் உள்ள தொட்ட கோம்பை மாரியம்மன் கோவிலுக்கு செல்வதற்காக சென்ற இருவரிடம் 500 ரூபாய் வாங்கிய வனத்துறை பெண் ஊழியரின் வீடியோ வைரலாகி உள்ளது.