விசயம் தெரிந்ததும் அதிர்ச்சியில் தமிழக காங். தலைவர்

Update: 2024-12-25 14:18 GMT

சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கும் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டறிந்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறை விழிப்புடன் செயலாற்ற வேண்டும் எனக் கோரியுள்ளார். பெண்கள் அதிகளவில் கூடுமிடங்களில் காவல்துறையினரை அதிகளவில் ஈடுபடுத்தி, பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்