'யார் அந்த சார்?"..Save our daughters - தமிழகத்தை அதிரவிடும் போஸ்டர்கள்

Update: 2024-12-29 11:38 GMT

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி அளித்த பாலியல் புகாரின்பேரில் ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். ஞானசேகர் தன்னை மிரட்டியபோது, சார் ஒருவருக்கும் ஒத்துழைக்க வேண்டும் என கூறியதாக, புகாரில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பிய நிலையில், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், யார் அந்த சார் ? என கேள்வி எழுப்பி, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. Save our daughters என்றும் அதில் அச்சிடப்பட்டுள்ளது. இதனிடையே, சில இடங்களில் சுவரொட்டி ஒட்டியபோது காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்