5 வீடுகளை தகர்த்த புல்லட்..பதற்றத்தில் நீலகிரி - மக்கள் ஆவேசம்

Update: 2024-12-22 08:40 GMT

கூடலூர் அருகே மேலும் ஐந்து வீடுகளை புல்லட் யானை உடைத்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். உயிர் போனால் தான் யானையை பிடிப்பீர்களா? எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் புல்லட் என்று அழைக்கப்படும் காட்டு யானை ஒன்று சமீப காலமாக இரவு நேரங்களில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகிறது. வீட்டில் இருக்கும் அரிசி, பருப்பு போன்ற உணவு பொருட்களை உண்பதற்காக வீடுகளை உடைப்பதுடன், அங்கிருக்கும் மனிதர்களை தாக்குவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தொடர்ச்சியாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வரை 28 வீடுகளை யானை உடைத்ததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், நேற்று இரவு மேலும் 5 வீடுகளை யானை உடைத்துள்ளதால் அங்கிருந்த மக்கள் பின்வாசல் வழியாக தப்பி ஒடி உயிர் பிழைத்துள்ளனர். மக்களின் உயிர் போனால் தான் யானையை பிடிப்பீர்களா? எனவும் மக்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்