ஊராட்சி மன்ற தலைவர் ரூ.20 லட்சம் கையாடல் என புகார்

Update: 2024-12-22 12:42 GMT

தருமபுரி மாவட்டம் உட்பட்டது மணியம்பாடி ஊராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த மஞ்சுளா சரவணனும், துணை தலைவராக அதிமுகவை சேர்ந்த ராசாத்தி வடிவேலும் இருந்து வருகின்றனர். பதவி காலம் முடிய இன்னும் 15 நாட்களே இருக்கும் நிலையில், ஊராட்சியில் உள்ள முப்பது லட்ச ரூபாய் பணம் எடுக்க துணை தலைவர் ராசாத்தி ஒப்புதல் அளிக்காததால், அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அவரை தகுதி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த ராசாத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் ராசாத்தியை தகுதி நீக்கம் செய்ய மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் துணை போயிருப்பதாகவும் அதற்கான ஆடியோ ஆதாரம் தம்மிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்