பாதி மூழ்கி மிதக்கும் வீடுகள் - பேய் மழையால் அவதிப்படும் மக்கள் | TN Rain | Trichy | Flood
முசிறி அருகே நள்ளிரவில் பெய்த கனமழை காரணமாக வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். திருச்சி மாவட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். மழைநீர் தேங்காதவாறு கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.