குமரியில் திமுக பிரமுகரை அரைநிர்வாணமாக ஓட ஓட விரட்டி தாக்கிய நபர்கள் - அதிர்ச்சி வீடியோ
கன்னியாகுமரி அருகே திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக ஓட, ஓட விரட்டி தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருமனையில், வட்டார கிறிஸ்தவ பேரவை இயக்க செயலாளரும், விசிக மாநில செயலாளருமான
ஸ்டீபன் சார்பில் கிறிஸ்துமஸ் விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. அப்போது, ஸ்டீபன் தமிழக முதல்வர் குறித்து ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாகவும், அதன திமுக விவசாய அணி பொறுப்பாளர் பிரபு செல்போன் மூலம் வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை பார்த்த ஸ்டீபன் மற்றும் அவருடன் இருந்தவர்கள் பிரபுவை விரட்டி சென்று செல்போனை பறிக்க முயன்றனர். அவர் தவறி கீழே விழுந்தபோதும், தொடர்ந்து அவர்கள் தாக்க முயன்றதால் பிரபு வேஷ்டி அவிழ்ந்தநிலையில் அரை நிர்வாணமாக ஓடி தப்பினார். இந்த காட்சிகள் வைரலாகி உள்ளநிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.