தமிழகத்தில் களமிறங்கும் `நோடல்' டீம் ? பீதியில் அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள்... கதிகலங்க வைத்த EDயின் கடிதம்...

Update: 2024-10-24 10:41 GMT
  • சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கை கையாள்வதற்கு நோடல் (Nodal) அதிகாரியை நியமிக்க வேண்டும் என தமிழக காவல்துறையிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது. எதற்காக என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
  • சட்டவிரோத பண பரிமாற்றங்களில் ஈடுபடும் சில அரசியல்வாதிகள், சில தொழில் அதிபர்களுக்கு அமலாக்கத்துறை பெயரை கேட்டாலே வயிற்றில் புளியை கரைக்கும்.
  • இந்நிலையில் மாநில காவல்துறையோடு ஒருங்கிணைப்பதற்காக நோடல் அதிகாரி நியமிக்கும்படி, நிதி நடவடிக்கை பணிக்குழு மாநில உள்துறைகளுக்கு பரிந்துரை செய்திருந்த‌து.
  • அதன்படி பல மாநிலங்களில் நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தென்மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை நோடல் அதிகாரி நியமிக்கப்படவில்லை.
  • இதனால், நோடல் அதிகாரி ஒருவரையும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான பிரிவையும் அமைக்கக்கோரி, தமிழக உள்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
  • ஊழல் வழக்கு மட்டுமல்லாது போதைப் பொருள் பறிமுதல், மோசடி கொலை, சைபர் கிரைம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளிலும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்து இருப்பதால் விசாரணைக்காகவும், ஒருங்கிணைக்கவும் நோடல் அதிகாரியை நியமிக்கும்படி கேட்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்