'யார் அந்த சார்', 'இவன்தான் அந்த சார்' - அதிமுக vs திமுக | DMK | ADMK | Anna University Issue
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் திமுகவை சேர்ந்தவர் என்றும், தொலைபேசி உரையாடலை வைத்தும் யார் அந்த சார் என்ற கேள்வியுடன் அதிமுகவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டப்பேரவையில் யார் அந்த சார் என்ற பதாகையை ஏந்தி முழக்கமிட்டனர். இதனிடையே, அண்ணாநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக நிர்வாகி சுதாகர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை கட்சியில் இருந்து அதிமுக நீக்கியது. இந்த சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சுதாகர் சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்து இவன்தான் அந்த சார் என திமுக தொழில்நுட்ப பிரிவினர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் யார் அந்த சார், இவன் தான் அந்த சார் போன்ற ஹாஸ்டேக் X தளத்தில் வேகமாக பரவி வருகிறது.