மீன் பிடிக்க சென்ற 10 மானவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களின் படகை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதி மீனவ பெண்கள் ஒன்று கூடி மீனவர்களையும் படகையும் விடுவிக்குமாறு ஒப்பாரி வைத்து, கண்ணீர் மல்க மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விசைபடகை கோடிக்கணக்கில் கடன் பெற்று வாங்கி உள்ளதால், தற்போது பெரும் நஷ்டம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று கதறி அழுதனர்.