`சென்னை மக்களுக்கான செய்தி'

Update: 2025-01-09 13:44 GMT

சென்னையில் இந்த ஆண்டு 7வது மாதம் வரை தண்ணீர் பிரச்னை இருக்காது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கி, இன்று நான்கவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தியின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு சென்னையில் இந்த ஆண்டு 7வது மாதம் வரை தண்ணீர் பிரச்னை இருக்காது என தெரிவித்துள்ளார். 15.560 டிஎம்சி கொள்ளளவு நீர் இருப்பதால் தண்ணீர் பிரச்னை இருக்காது என்று தெரிவித்த அவர், வடசென்னையில் 946.43 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெறுவதாகவும், 2026ம் ஆண்டு அப்பணிகள் முடிவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்