மண் சரிவில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய அரசுப் பேருந்து.. பீதியில் அரண்டு போன பயணிகள்

Update: 2024-12-15 02:47 GMT

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே மலைச் சாலையில் மண்சரிவு ஏற்பட்ட நிலையில், அவ்வழி சென்ற அரசுப் பேருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மலைச்சாலையில் ஆங்காங்கே பாறைகள் உருண்டு விழுவதும், மரங்கள் சாய்வதுமாக உள்ளது. இந்நிலையில் தர்மத்துப்பட்டியில் இருந்து ஆடலூர், பன்றிமலை செல்லும் சாலையில் அமைதிச்சோலை என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டது. நான்காவது கொண்டை ஊசி வளைவில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில், மண் சரிவானது ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்துக்கொண்டு ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால், பேருந்தில் இருந்து பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்