பேஸ்புக் தோழருடன் உல்லாசம்.. பின் குளித்துவிட்டு வந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சென்னையில் முகநூலில் பெண்ணிடம் பழகி, உல்லாசமாக இருந்து 8 சவரன் நகையை திருடிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை திரு.வி.க நகரை சேர்ந்த 54 வயது பெண் ஒருவர், முகநூல் மூலம் கடந்த மாதம் சிவா என்பவரிடம் பழகியுள்ளார். கடந்த 27ஆம் தேதி அந்த பெண்ணின் வீட்டுக்கு சிவா வந்து, இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர், அந்த பெண் குளித்துவிட்டு வந்த பார்த்தபோது, மேஜையில் வைத்திருந்த 8 பவுன் நகையை காணவில்லை. முகநூல் நண்பர் சிவாவையும் காணாததால், அதிர்ச்சி அடைந்த பெண், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்த 38 வயதான சிவா என்பது தெரிய வந்தது. இதையடுத்து, குமரிக்கு சென்று சிவாவை கைது செய்து விசாரித்த போது, திருடிய நகையை 3 லட்சத்து 40 ஆயிரத்திற்கு விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். நகையை பறிமுதல் செய்து, சிவாவை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.