மீண்டும் மீண்டும் அச்சுறுத்தும் காட்டு யானை... 2 கும்கி யானையை களத்தில் இறக்கிய வனத்துறை | Dindigul
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே விவசாய நிலங்ளை சேதப்படுத்தும் காட்டு யானைகளைப் பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து வரும் யானைக்கூட்டம், தென்னை, வாழை, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. வனத்துறையினர் யானைகளை காடுகளுக்குள் விரட்டி அடித்தாலும், மீண்டும் மீண்டும் அவற்றின் அட்டகாசம் தொடர்வதால் அமைச்சர் இ.பெரியசாமியிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, காட்டு யானைகளை கட்டுப்படுத்த டாப்ஸ்லிப் முகாமிலிருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானையும், முதுமலை முகாமில் இருந்து கிருஷ்ணா என்ற கும்கி யானையும் நீலமலைக்கோட்டைக்கு வரவழைக்கப் பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.