தனித்தீவாக மாறிய இந்த கிராமம்... பெரும் சிரமத்தில் மக்கள் வைக்கும் கோரிக்கை

Update: 2024-12-17 05:29 GMT

தனித்தீவாக மாறிய இந்த கிராமம்... பெரும் சிரமத்தில் மக்கள் வைக்கும் கோரிக்கை

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் அருகே வெள்ளம் வடியாத நிலையில், அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நந்திமங்கலம் கிராமத்தை மழைநீர் சூழ்ந்தது. அந்த கிராமம் துண்டிக்கப்பட்டு தனித்தீவாக மாறியதால், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி கிராம மக்கள் தவித்து வருகின்ன்றனர். பழைய கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் குறைந்தால் மட்டுமே கிராமத்தில் தேங்கியுள்ள தண்ணீர் வடியும் சூழல் இருப்பதால், மாவட்ட நிர்வாகம் மோட்டார் உதவியுடன் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்