தலையில் ரத்தம் சொட்ட சொட்ட காயம்..3 நாட்களாக மாற்றுத்திறனாளியை அலையவிட்ட மருத்துவமனை | Villupuram

Update: 2024-12-17 07:35 GMT

மயிலம் அருகே முட்டியூர் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான பாஸ்கர், மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சாலையில் இருந்த வேப்பமரம் முறிந்து தலைமீது விழுந்தது. இதில் ரத்தக்காயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர், தையல் போட வேண்டும் என்றும், ரத்தம் கட்டியுள்ளதாகவும் கூறிய நிலையில், 3 நாட்களாகியும் மருத்துவர் வந்து பார்க்கவில்லை என்றும், சிகிச்சை முறையாக அளிக்காமல் இழுத்தடிப்பதாகவும் பாஸ்கரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, புதுச்சேரி மருத்துவமனைக்கு பாஸ்கரை கொண்டு செல்வதாக, அவரது குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்