"நாங்க தான் பாத்ரூம் கிளீன் பண்றோம்.. ரொம்ப பயமா இருக்கு" - வேதனையில் மாணவர்கள் சொன்ன வார்த்தை

Update: 2024-12-17 07:41 GMT

தாளவாடியில் கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் கலைக்கல்லூரி தொடங்க அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தாளவாடி மலைப்பகுதியில் தற்காலிகமாக திகினாரை அரசு உயர்நிலைப் பள்ளி கட்டிடத்தில் கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் அரசு கலைக்கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட 12 கோடியே 46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டு கட்டுமான பணிகள் முடிந்து, இந்த கல்வியாண்டு முதல் புதிய கட்டிடத்தில் கல்லூரி இயங்கி வருகிறது. இதற்கிடையே, கல்லூரியில் பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் பேராசிரியர் அல்லாத பணியிடங்கள் பெருமளவில் காலிப் பணியிடங்களாக உள்ளதால் மாணவர்கள் கல்வி கற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், கல்லூரியில் பல்வேறு அடிப்படை வசதிகள் தேவைப்படுவதாகவும், வகுப்பறைகள் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்ய ஆள் இல்லாததால், தாங்களே சுத்தம் செய்ய வேண்டியுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்