நிரந்தர தீர்வு என்ன? - ஆய்வுக்கு வந்த மத்திய குழுவிடம் குமுறிய கடலூர் மக்கள்

Update: 2024-12-09 02:24 GMT

பகண்டை, மேல்பட்டாம்பாக்கம், அழகிய நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மத்தியக்குழுவினர் ஆய்வு செய்தனர். அழகிய நத்தம் பகுதியில், ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினரிடம், தமிழக அதிகாரிகள் சேத விவரங்களை எடுத்துரைத்தனர். பல்வேறு இடங்களிலும் வெள்ளத்தின்போது எடுக்கப்பட்ட காட்சிகள் புகைப்படமாக வைக்கப்பட்டிருந்தன. விவசாயிகள், வெள்ளத்தில் சேதமடைந்த நெற்பயிர்களை கையில் கொண்டு வந்தனர். அதுகுறித்து சிறப்பு அதிகாரி மற்றும் மாவட்ட அதிகாரிகள், மத்தியக்குழுவினரிடம் விளக்கம் அளித்தனர். அப்போது பேசிய அவர்கள், ஒவ்வொரு முறையும் வரீங்க எங்களுக்கு நிரந்தர தீர்வு என்ன? என்று வேதனையுடன் கேள்வி எழுப்பினர்.

விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் உள்ள மணல் பரப்புகளை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதன்பின் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கடலூர் ஞானமேடு பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களை பார்வையிட்ட மத்தியக்குழுவினர், குண்டு உப்பளவாடி பகுதியில் ஆய்வை முடித்துக் கொண்டு புதுச்சேரி புறப்பட்டு சென்றனர்

Tags:    

மேலும் செய்திகள்