ரூ.99 ஆயிரத்து 875 கோடி - தமிழக அரசுக்கு குவிந்த வருவாய்..!

Update: 2024-12-25 03:45 GMT

சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி, பதிவுத்துறை அலுவலகத்தில் 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் மூர்த்தி, வணிகவரித்துறை வருவாய் நடப்பு நிதி ஆண்டில் டிசம்பர் 23ம் தேதி வரை 99 ஆயிரத்து 875 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் வரி வருவாய் வளர்ச்சியில், இந்திய அளவில் தமிழ்நாடு முதன்மையாக விளங்குவதாக சுட்டிக்காட்டி, வரும் மாதங்களில் அனைத்து இணை ஆணையர்களும் மேலும் சிறப்புடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்