``தடை தொடரும் ... மீறக்கூடாது..'' - சிதம்பரம் கோவில் விவகாரம்... ஹைகோர்ட் அதிரடி

Update: 2024-11-19 10:23 GMT

சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜர் கோவில் கொடி மரத்தை அகற்றி விட்டு, புதிய கொடி மரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஹரிஹரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையில், கோவில் கொடி மரம் அமைப்பது தொடர்பாக தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்

என சிதம்பரம் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து,பிரம்மோற்சவம் நடத்தப்படாது என்பதை மனுவாக தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அறநிலையத்துறை தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பிரம்மோற்சவம் நடத்தப்பட மாட்டாது என ஏதும் தெரிவிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள்,

கொடி மர விவகாரம் தொடர்பாக சிதம்பரம் சார்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறக்கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்