சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களிடம் தீட்சிதர்கள் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த தெய்வீக பக்தர்கள் பேரவை அமைப்பின் நிறுவன தலைவர் ஜெமினி ராதா, பணம் வாங்கிக் கொண்டுதான் நடராஜரை தரிசனம் செய்ய கனகசபையில் அனுமதிக்கிறார்கள் என தெரிவித்தார். கோயிலில் பொது தீட்சிதர்கள் தொடர்ந்து ஆணவப் போக்கோடு நடந்து கொள்கிறார்கள் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.