காமெடி பெயரில் `கிரிஞ்ச்’.. ஆபாசம்..அருவருப்பு - கைதுக்கு பயந்து மண்டியிட்ட ஸ்டாண்ட் அப் காமெடியன்

Update: 2025-01-01 06:12 GMT

காமெடி என்ற பெயரில் `கிரிஞ்ச்’ ஆபாசம்.. அருவருப்பு - கைதுக்கு பயந்து மண்டியிட்ட ஸ்டாண்ட் அப் காமெடியன் பரத் பாலாஜி

நேரு குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்த ஸ்டாண்ட் அப் காமெடியன் பரத் பாலாஜியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளதன் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

அசுர வளர்ச்சியடைந்த சமூக வலைத்தளங்களால், ஸ்டாண்ட் அப் காமெடி கலாச்சாரம் பெருகி வருகிறது..

ஒரு சிலரால் இந்த காமெடி ரசிக்கப்பட்டாலும், பலர் ஸ்டாண்ட் அப் காமெடி என்ற பெயரில் வரம்பு மீறி பேசுவதை வழக்கமாக்கி விட்டனர்.

காமெடி என்ற பெயரில் இரட்டை அர்த்த காமெடிகள், டார்க் ஹூயுமர் என மேடையில் முகம் சுழிக்கும் கருத்துகளை தெரிவிப்பது இக்கால ஸ்டாண்டப் அப் காமெடியாக உருவெடுத்துள்ளது..

இந்த வரிசையில் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஸ்டாண்ட் அப் காமெடியன் பரத் பாலாஜி.. பல இடங்களில் தனது ஷோக்களை நடத்தி வந்த அவர், teenage பருவத்தில் இருந்தே ஸ்டாண்ட் அப் காமெடி செய்து வருவதாக தெரிகிறது.

தொடர்ந்து மேடைகளில் காமெடி என்ற பெயரில் கிரிஞ்ச் செய்து வந்த அவர், நேரு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறான கருத்துகளை பேசியுள்ளார்..

இதனை கைத்தட்டி பலர் ரசிக்க, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் கண்டனத்திற்குள்ளானது.

இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது கடும் கண்டனத்தை தெரிவித்திருப்பதோடு, பரத் பாலாஜியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள செல்வப்பெருந்தகை, “STANDUP COMEDY என்ற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக, அவரின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பரத் பாலாஜி என்பவர் பேசிய பேச்சை வன்மையாகவும், கடுமையாகவும் கண்டிப்பதாக கூறியிருக்கிறார். புகழ்பெற்ற தலைவர்களைப் பற்றி அவதூறாக பேசி விளம்பரம் தேடுவது வாடிக்கையாகி விட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார் அவர்.

ஏற்கனவே ஸ்டாண்ட் அப் காமெடி செய்து வந்த ஹுசைன் என்பவர், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தது விவாதத்தை கிளப்பிய நிலையில், தற்போது பரத் பாலாஜி மீதும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்