சென்னையில் இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல் - சினிமா டான்சர் உட்பட 7 பேர் கைது
சென்னை கோயம்பேடு அருகே, இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சினிமா டான்சர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் எடிசன், மணிமாறன் இருவரும், சர்வீஸ் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு சாப்பிட வந்தபோது, சொகுசு காரில் வந்த 10 பேர் கும்பல், இருவரையும் சரமாரியமாக தாக்கி உள்ளனர். இதில் ஜோசப் எடிசனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. மணிமாறன் தலையில் பலத்த காயம் அடைந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காரின் பதிவெண்ணை வைத்து சினிமா டான்சர் மோரிஸ், கௌதம், வேலாயுதம், குமார், கிருஷ்ணமூர்த்தி, அருண்குமார், கானா பாடகர் பஞ்சுமிட்டாய் சந்தோஷ் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.