முதல்வர் குடும்பத்தினர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஜீயரை அவதூறாக விமர்சித்ததாக அவரை சென்னை சைபர் கிரைம் போலீசார், டிசம்பர் 15-ஆம் தேதி கைது செய்தனர். பின்னர், பெண் வழக்கறிஞரை விமர்சித்ததாக திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார். அவருடைய ஜாமின் மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, அவருக்கு ஜாமின் கொடுக்க கூடாது என்று காவல் துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ரங்கராஜன் நரசிம்மன் பேசிய வீடியோக்களை பார்வையிட்டு, அரசியல் தலைவர்கள், மடாதிபதிகள் பற்றி பேசக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.