அதிரடி காட்டும் IT அதிகாரிகள்... சென்னையில் பரபரக்கும் சோதனை
சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை பெருங்குடியில் உள்ள எல் அண்ட் டபிள்யூ கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 7 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், அந்நிறுவனம் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். மேலும் இந்த நிறுவனம் பணப்பரிமாற்றமும் செய்து வருவதால், அது தொடர்பாகவும் ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.