சென்னையில் மன வளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவியின் தோழியும் சிறை செல்ல வாய்ப்பு உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.இந்த வழக்கில் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள எழும்பூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் 12 ஆம் வகுப்பு மாணவர், கல்லூரி மாணவர்கள் சுரேஷ், கார்த்திக், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அஜீத்குமார், மணி என்ற சுப்பிரமணி உள்ளிட்ட 7 பேர் ஆகியோரை ஏற்கனவே கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சூழலில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெண் தோழி ஒருவரையும் கைது செய்துள்ள போலீசார், அவரிடமும் தீவிர விசாரணை செய்து வரும் நிலையில், அவரும் சிறைக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.