#JUSTIN | எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து.. - திண்டுக்கல்லில் பரபரப்பு..
திண்டுக்கல் மாவட்ட வேடசந்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து
மூனாண்டிபட்டியில் உள்ள ஆலையில் எண்ணெய் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது
3 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்
எண்ணெய் ஆலை தீ விபத்தில் இருவர் காயம் - மருத்துவமனையில் அனுமதி
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள மூனாண்டிபட்டியில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் ஆலை செயல்பட்டு வருகிறது.
இதில் 500க்கும் மேற்பட்ட வட மாநில மற்றும் உள்ளூர் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மதியம் திடீரென ஆலையில் உள்ள எந்திரங்களில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக திடீரென தீப்பற்றியது.
அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது. இதனால் பணியில் இருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
கரும் புகையுடன் தீ மளமளவென பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து நெருப்பை அணைக்கும் முயற்சியில் எண்ணெய் ஆலை நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டனர்.
மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து அரைமணி நேரம் போராடி நெருப்பை அணைத்தனர்.
வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.