இரவில் பதம்பார்த்த மழை - காலையில் சென்னை மக்கள் கண்ட காட்சி | Chennai | Rainfall
சென்னை நீலாங்கரை பகுதியில் விடிய விடிய மழை பெய்தது. நீலாங்கரை, துரைப்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம், திருவான்மியூர் அடையாறு உள்பட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. காலையில் மழை சற்று குறைந்தாலும் சாரல் மழை போல் தொடர்ந்து பெய்த வண்ணம் உள்ளது. வானம் இருண்டு மேகமூட்டத்துடன் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர். மழை காரணமாக நீலாங்கரை வழியாகச் செல்லும் பக்கிங்ஹாம் கால்வாயில் நீர்மட்டம் உயர்ந்து, அதைச் சுற்றியுள்ள பல தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.