ஒவ்வொரு நாளும் அச்சத்துடனே கடக்கும் சோகம்.. சென்னையில் நடுக்கத்தில் ஹவுசிங்போர்டு வாசிகள்

Update: 2024-12-23 03:01 GMT

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஒரு

வீட்டின் சீலிங் இடிந்து விழுந்ததால் அங்கு வசிப்பவர்கள் அச்சமடைந்தனர்.

சென்னை மேற்கு மாம்பலம் பிருந்தாவனம் தெருவில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள்

உள்ளன. கடந்த 1973 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த குடியிருப்புகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சில வீடுகளின் சீலிங் இடிந்து விழுவதாலும் படிக்கட்டுகள் மோசமான நிலையில் இருப்பதாலும் அங்கு குடியிருப்பவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் ஒரு வீட்டின் சீலிங் இடிந்து விழுந்ததால் பொருட்கள் சேதமடைந்ததாகவும்,நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் இல்லை என்றும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார். பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிதாக கட்டித்தர அரசு தயாராக இருந்தாலும் அங்கு வசிப்பவர்கள் காலி செய்ய மறுப்பதாகவும் அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்