"மனசாட்சியே இல்லயா... 30 வயசு பையன் எப்படி சாவான்..." - இளைஞர் மரணத்தில் பகீர் கேள்வி
சென்னை கிண்டி மருத்துவமனையில், உரிய சிகிச்சை அளிக்காததால் இளைஞர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் கிண்டியிலுள்ள உயர்சிறப்பு மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக கடந்த 13-ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்தார். இதனிடையே, உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், மருத்துவர்கள் இல்லாததே விக்னேஷ் உயிரிழக்கக் காரணம் என்றும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.