குழந்தையின் கழுத்தை நெரித்ததும்..நின்று போய் வந்த மூச்சு..சைகையில் நடந்ததை சொன்ன குழந்தை
முகலிவாக்கம் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் சிலர் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். வீட்டின் கீழ்தளத்தில் வசிக்கும் வடமாநில பெண்ணின், 2 வயது பெண் குழந்தையை, மேல் தளத்தில் வசிக்கும் வடமாநில இளைஞர் தண்ணீரில் மூழ்கடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, குழந்தையின் உறவினர்கள், அந்த இளைஞரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து, மாங்காடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த நபர் தனது வாயை பொத்தி, கழுத்தை நெரித்ததாக குழந்தை சைகை மூலம் தெரிவித்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.