வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... சென்னையில் அதிரடி மாற்றம்... | Chennai

Update: 2024-11-11 08:27 GMT

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு 5 ஆயிரத்து 904 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய வாகன நிறுத்தக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்திற்காக பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் வாகன நிறுத்த இடங்களில் எத்தனை வாகனங்கள் உள்ளன? - அங்கு ஏதாவது விதிமீறல் நிகழ்கிறதா என்பதை கண்காணிக்க முடியும் என்றும், இதற்கென்று ஒரு தனியாக கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்த இடத்தை முன்பதிவு செய்வதற்கும், வாகனங்களின் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்வதற்கும் பி.ஓஎஸ் மெஷின்கள் பயன்படுத்தப்படும். இதற்காக தனிச் செயலி மற்றும் இணையதளம் உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான டெண்டர் விரைவில் கோரப்பட உள்ள நிலையில், முன்னதாக இப்பணியை மேற்கொள்ள விருப்பமுள்ள நிறுவனங்களுடன், வரும் 14-ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில், டெண்டர் ஆவணத்தை தயாரிப்பத​ற்கான பணியை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மேற்கொள்ள உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்