போரூர் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர், தனது மாமானாரின் பிறந்தநாளுக்காக கேக் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். இதனை தினேஷின் கர்ப்பிணி மனைவி உள்ளிட்டோர் சாப்பிட்டுள்ளனர். பின்னர் மற்றவர்களுக்கு கொடுப்பதற்காக கேக்கை வெட்டியபோது பூஞ்சை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்து கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். கடை ஊழியர்களிடம் இதுகுறித்து சரமாரி கேள்வி எழுப்பிய தினேஷ், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ளார்.