காதலித்து ஏமாற்றிய பிரபல காமெடி நடிகர்.. கதறும் துணை நடிகை.. வெளியான அதிர்ச்சி தகவல்
உல்லாசமாக இருப்பதற்காகவும், பணம், நகையை ஏமாற்றி வாங்கிச் செல்வதற்காகவும் மட்டுமே காதல் சுகுமார் தன்னுடன் பழகியதாக குற்றம்சாட்டியுள்ள துணை நடிகை, தர்காவில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். நடிகர் ரோபா சங்கர் திருமண நாள் விழா உட்பட, அனைத்து சினிமா நிகழ்ச்சிகளிலும் கணவன் -மனைவி போலத்தான் சென்றதாக குறிப்பிட்டுள்ள அவர், கடன் வாங்கி காதல் சுகுமாருக்கு பணம் கொடுத்திருப்பதாக கூறியுள்ளார். மூன்றாண்டுகள் கணவன் மனைவி போல் வாழ்ந்தது மட்டுமின்றி, பணம், நகை பறிப்பில் ஈடுபட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்மெனவும் அந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.