தொழிலதிபர்களே குறி... சிக்கிய தாய், மகள்... மலேசியா வரை நீண்ட `கை'... சென்னையில் ஷாக்

Update: 2025-01-12 14:45 GMT

மலேசியாவை சேர்ந்த தொழிலதிபரிடம் 10 கோடியே 61 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில், சென்னையை சேர்ந்த தாய் மற்றும் மகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 12 ஆயிரம் டன், சர்க்கரை ஏற்றுமதி செய்வதாக கூறி, போலி ஆவணம் மூலம் மோசடி செய்த‌தாக மலேசிய தொழிலதிபர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், வளசரவாக்கத்தை சேர்ந்த தமிழரசி, அவரது தாயார் கோவிந்தம்மாளை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இருந்து சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகளின் ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்