வேலூர், சங்கரன் பாளையத்தைச் சேர்ந்தவர், மருத்துவர் மணிகண்டன். 32 வயதான இவருக்கு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் ஆன நிலையில், கடந்த ஒராண்டாக, 2 பேரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.Husband commits suicide due to depression after separation from wife
இந்த சூழலில் தான், மணிகண்டன் வீட்டில் கையில் குளுக்கோஸ் ஏற்றிய நிலையில் சுயநினைவு இன்றி கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். தொடர்ந்து, வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனைக்கு பிறகு, உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது..
இதன் பின்னணியில், மனைவி பிரிந்து சென்ற மன உளைச்சலில் இருந்து வந்த மணிகண்டன், குளுக்கோஸில் விஷத்தைக் கலந்து உடலில் ஏற்றி தற்கொலை செய்திருப்பதாக போலீசார் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.