``அப்பா அங்க யாரோ இருக்காங்க'' - பதற வைத்த திருட்டு சம்பவத்தின் சிசிடிவி

Update: 2025-01-12 14:15 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, பூட்டிய வீட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சேவூர் ஊராட்சிக்குட்பட்ட இ.பி. நகர் பகுதியை சேர்ந்த காய்கறி கடை வியாபாரி சரவணன் என்பவர் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்ற நிலையில், இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பைக்கில் வந்து வீட்டின் பூட்டை ராடால் உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது, சரவணன் வீடு திரும்பிய நிலையில், மர்ம நபர்கள் இருப்பது தெரியவந்தது. இதனைக் கண்டதும் சரவணன் குடும்பத்தினர் கூச்சலிட்டு மர்ம நபர்களை துரத்தி பிடித்த போது, ஊர் மக்கள் உதவியுடன் ஒருவரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். வீட்டு உரிமையாளர் வந்ததால் பொருட்கள் ஏதும் திருடு போகாத நிலையில், தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்