"தவறான சிகிச்சையால் கோமாவுக்கு சென்ற பெண்" - பிரபல சென்னை மருத்துவமனையில் பெரும் பரபரப்பு

Update: 2024-11-22 06:17 GMT

சென்னை இசபெல்லா மருத்துவமனையில், நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

நடுக்குப்பம் பகுதியை சேர்ந்த மீன் வியாபாரியான கல்யாணி என்பவருக்கு, கடந்த ஆறாம் தேதி மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் நுரையீரல் தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு கல்யாணி சுயநினைவை இழந்துள்ளார். தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்த உறவினர்கள், அவரை வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். எனினும், மருத்துவமனை தரப்பில் சிகிச்சைக்கான கட்டணம் கேட்டதால், கோபத்தில் உறவினர்கள் மருத்துவமனையில் கூடினர். பின்னர் போலீசார் சமரசம் செய்ததை தொடர்ந்து, கல்யாணி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்