வழக்கறிஞரை சரமாரியாக தாக்கிய போலீஸ்..! கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பு | Kallakurichi
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நீதிமன்றம் வளாகம் அருகே வழக்கறிஞர் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து, கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக வழக்கறிஞர்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது, தலைமை தபால் நிலையம் அருகே காவலர் ஒருவரால் வழக்கறிஞர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை கண்டித்து கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில், 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.