மாணவர்களுக்காக கஷ்டப்படும் பெற்றோர்... சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

Update: 2024-11-22 10:52 GMT

சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த திருத்தணியை சேர்ந்த மாணவர் சுந்தர், கடந்த அக்டோபரில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்டு மரணமடைந்தார். இதையடுத்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் சந்துரு என்ற மாணவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.

காவல்துறை தரப்பில், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக மாணவர்கள் மீது 22 வழக்குகள் பல்வேறு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டது. குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் அதிகபடியான மாணவர்களின் பெற்றோர்கள் வீட்டு வேலை செய்து படிக்க அனுப்பும் நிலையில் கல்லூரிக்கு செல்லாமல் அடிதடியில் ஈடுபடுவதாக நீதிபதி வேதனை தெரிவித்தார். இதையடுத்து, உயர்கல்வி துறை செயலாளரை வழக்கில் இணைத்து உத்தரவிட்ட நீதிபதி,

மாணவர்களுக்கு இடையேயான மோதல் சம்பவம் தொடர்பாக, காவல்துறை மற்றும் ரயில்வே போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்யவும், அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 26ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்